உலக சுகாதார தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் உலக சுகாதார தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி;
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக சுகாதார தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.சதிஷ் கொடியசைத்து துவக்கிவைத்தார் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் துவங்கிய இப்பேர|ணி நெசவாளர்காலனி வழியாக 4 ரோடு வரை சென்று நிறைவடைந்தன.இப்பேரணியில் மருத்துவ துறை இணை இயக்குனர் சாந்தி மற்றும் தனியார் கல்லூரி மானவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் தலைகவசம், போதையில் பயணம், அதிக வேகம், சீல்ட் பெட் அணிவது, குழந்தை திருமணம் தடுப்பது, பெண் குழந்தைகள் கல்வி உள்ளிட்ட பதாதைகளை மாணவிகள் கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர் இதில் மருத்துவ சுகாதார இணை இயக்குனர் சாந்தி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி,தர்மபுரி மருத்துவ சங்கம் மருத்துவர்கள்,இளங்கோவன். கோவிந்தராஜ்,பாலசுப்பிரமணியன் செந்தில். விஜய் வித்யாலயா கல்லூரி தாளாளர் மணிவண்ணன் மற்றும் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.