குந்தாவில் தீயில் கருகிய ஆறு பசுமாடுகள் ...............
காவல்துறை விசாரணை;
குந்தாவில் தீயில் கருகிய ஆறு பசுமாடுகள் ............... நீலகிரி மாவட்டம் மஞ்சுர் அடுத்த குந்தா பாலம் பகுதி சேர்ந்த தேவராஜ் சோபனா தம்பதியினர் கடந்த 20 ஆண்டுகளாக ஆறுக்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார் இதில் நான்கு கரவை மாடுகளும் இரண்டு மாடுகளும் அடங்கும் வழக்கம்போல் காலை 6:00 மணிக்கு மேய்ச்சலுக்கு விட்டு இரவு கொட்டகைக்குள் அடைத்து வைத்து பால் கறந்த உடன் தண்ணீர் மற்றும் பசுந்தீவனங்களை வழங்குவது வழக்கமாக வைத்துள்ளார் இரவு நேரம் மழை பெய்ததால் 11:30 மணி வரை மாடுகளை பராமரித்து கொட்டகையை அடைத்து வீட்டிற்கு சென்றுள்ளார் இரவு 11 45 மணி அளவில் கொட்டகைக்குள் புகை வருவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தொலைபேசியில் தெரிவித்துள்ளனர் உடனடியாக தேவராஜ் விரைந்து கொட்டகைக்குள் சென்றுள்ளார் மலவென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது செய்வதறியாத திகைத்த தேவராஜ் அங்கும் இங்குமாக கிடந்த தண்ணீர்களை எடுத்து அணைக்க முயற்சி செய்து உள்ளார் அருகே இருந்த பொதுமக்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் தீயே அணைக்கும் முயற்சி பயனளிக்காமல் கொட்டகைக்குள் அடைத்து வைத்திருந்த 6 பசுக்களும் தீக்கு இரையாகி கருகிய நிலையில் உயிரிழந்தது தகவல் அறிந்த அப்பகுதியில் உள்ளவர்கள் கண்ணீர் விட்டு கதறைய அவரு அப்பகுதியில் திரண்டனர் பல வருடங்களாக பாசத்தோடு வளர்த்து வந்த பசுக்கள் உயிரிழந்ததால் தேவராஜ் ஷோபனா மற்றும் அவர்களின் குழந்தைகள் செய்வதறியாது கண்ணீரோடு இறந்த பசுக்கள் அருகே நின்றிருந்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறை எவ்வாறு தீப்பற்றி பசுக்கள் இறந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.