குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் பணிபுரியும் திட்ட அலுவலர்கள், ஆய்வுக்கூட்டம் .;
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் பணிபுரியும் மாவட்ட திட்ட அலுவலர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் ஐ.சா.மெர்சி ரம்யா இஆப., தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இஆப., முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் ஐ.சா.மெர்சி ரம்யா இஆப.,தெரிவித்ததாவது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளான கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 0-6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயனடைவதை உறுதி செய்யுமாறும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் நலனை தொடர்ந்து கண்காணித்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியினை உறுதிசெய்ய வேண்டும் என அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் ஐ.சா.மெர்சி ரம்யா இஆப. தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கேத்தரின் சரண்யா, இ.ஆ.ப., தருமபுரி வருவாய் கோட்டாட்சியர்.காயத்ரி, மாவட்ட திட்ட அலுவலர் (ஒ.கு.வ.தி.பணிகள்), மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்