நடைபாதையில் முள்வேலி போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை அருகே நடைபாதையில் முள்வேலி அமைத்து தடை ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்;
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அம்மாபட்டி ஊராட்சி முத்தாலம்மன் கோவில் தெருவில் அருந்ததியர் இன மக்கள் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பிடமிருந்து நடைபாதைக்காக இடம் வாங்கி நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த ஒரு சிலர் நடைபாதையை முள்வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். ஏன் என்று கேட்டதற்கு இந்த வழியாக நடக்கக்கூடாது என்று தகாத வார்த்தைகள் கூறிவிட்டனர். எனவே தீண்டாமை நோக்கத்தோடு முள்வேலி போட்ட நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க கோரி அருந்ததியர் மக்கள் நடைபாதியை பயன்படுத்தி உபயோகிக்க வேண்டும் என்று அருந்ததியர் மக்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.