ராயக்கோட்டையில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.
ராயக்கோட்டையில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பணிகள் முடிந்து நேற்று. வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்தார். இதில் 5 ரூபாய் காயின் போட் டால் 20 லிட்டர் குடிநீர் கிடைக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள், பொதுமக் கள் என பலர் கலந்துகொண்டனர்.