வேப்பனப்பள்ளி அருகே கன்று விடும் விழா.
வேப்பனப்பள்ளி அருகே கன்று விடும் விழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சிகுப்பம் பகுதியில் இரண்டாம் ஆண்டு கன்று விடும் விழா நடைப்பெற்றது. இதில் பர்கூர், வேப்பனப்பள்ளி, குருநாயனப்பள்ளி வரட்டனப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட கன்றுகள் கலந்து கொண்டன. பின்னர் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு கன்றுகளை அவிழ்த்து விடபட்டது. வெற்றி பெற்ற கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவை காண நாச்சிகுப்பம் சேர்ந்த இளைஞர்கள் என நூற்றுக்கணக்கான ஊர்பொதுமக்கள் கண்டுகளித்தனர்.