சென்னை: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை

மயிலாப்பூரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.;

Update: 2025-03-30 18:39 GMT
சென்னை: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
  • whatsapp icon
மயிலாப்பூரில் 13 வயதுள்ள சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். பெற்றோர் வேலைக்குச் செல்வதால் பள்ளி முடிந்த பிறகு அந்தச் சிறுமி வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். அப்போது சிறுமியின் வீடு அருகே வசிக்கும் 38 வயதான உறவினர், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அடிக்கடி உறவு கெ்ாண்டுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸார் அந்த நபரைக் கைது செய்தனர். வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதி்த்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Similar News