பெஞ்சல் புயல் நிவாரண பணிக்கு கரூரில் இருந்து 150 பேர் பேருந்தில் பயணம்.
பெஞ்சல் புயல் நிவாரண பணிக்கு கரூரில் இருந்து 150 பேர் பேருந்தில் பயணம்.
பெஞ்சல் புயல் நிவாரண பணிக்கு கரூரில் இருந்து 150 பேர் பேருந்தில் பயணம். பெஞ்சல் புயல் காரணமாக தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் பலத்த சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளில் மீட்பு பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பணியாற்றக்கூடிய உள்ளாட்சித் துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து, மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் பணியாற்றக்கூடிய உள்ளாட்சித் துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சுமார் 150 பேர், கரூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரவணன் தலைமையில், அரசு பேருந்தில் சற்று முன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.