சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது. 27 மது பாட்டில்கள் பறிமுதல்.

சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது. 27 மது பாட்டில்கள் பறிமுதல்.

Update: 2024-12-23 14:31 GMT
சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது. 27 மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிசம்பர் 22ஆம் தேதி காலை 9:30 மணியிலிருந்து 10:30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள ராமன் மீன் கடை பின்புறம் சட்டவிரோத மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம்,காளையார் கோவில், சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் வயது 30- என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 27 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Similar News