டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக வைகோ ஆர்ப்பாட்டம்
மதுரை மேலூரில் வைகோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுக சார்பில் மேலூர் பேருந்து நிலையம் அருகில் இன்று (ஜன.3) காலை நடத்தப்பட்ட அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.