பனங்கள் விற்பனை செய்த நபர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெனசியில் பனங்கள் விற்பனை செய்த நபர் கைது;

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மெணசி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பனங் கள் இறக்கி விற்பதாக பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்று காலை பாப்பிரெட்டிப்பட்டி காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மெணசி கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் வயது 47 என்பவர் கள் இறக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.